தொட்டிலில் கதறியழுத ஆறு மாத குழந்தையை விட்டு தூக்கில் தொங்கிய தாய் : வவுனியாவில் சோகம்!


வவுனியா நெளுக்குளத்தில்  இன்று (15) காலை 9.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்ப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா நெளுக்குளம், புதையல்பிட்டியில்  வசித்துவரும்  ஆறு மாத கைக்குழந்தையின் தாய் சுதன் வாணி (வயது 24) என்ற இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

நேற்றைய தினம் இவரது சொந்த இடமான கிளிநொச்சியில் உள்ள வீட்டுக்கு காலை சென்று மீண்டும் மாலை நேரத்தில் வீடு வந்துள்ளார். பின்னர் இன்று காலை எழுந்து வீட்டு வேலைகள் எல்லாம் முடித்து கணவரின் தந்தைக்கு காலை உணவு செய்து வழங்கியுள்ளார். அதன் பின்னர் மாமனார் கூலி வேலைக்கு சென்றுள்ளார்.


கணவன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்று வீட்டுக்கு திரும்பி வரும் போது கைக்குழந்தை தொட்டிலில் இருந்து அழுது கொண்டிருந்துள்ளது. குறித்த பெண்ணின் கணவர் குழந்தையை தூக்கி கொண்டு தாயை தேடிய போது குறித்த பெண்  தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.


குறித்த பெண்ணின் மரணத்திற்கான காரணம் தொடர்பில்  நெளுக்குளம் பொலிஸார் மற்றும் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment