நுவரெலியாவில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு!

நுவரெலியாவில் தற்போது உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகள் மற்றும் வெளிமாவட்ட பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது.

இங்கு தொடர்ந்து நடைபெறும் களியாட்ட நிகழ்வுகளில் பெரும்பாலானோர் கலந்து கொண்டிருக்கின்றனர்.

இதன் ஒரு கட்டமாக நடைபெற்று கொண்டிருக்கும் மலர் கண்காட்சிக்கு நுவரெலியா விக்டோரியா பூங்கா இன்று (புதன்கிழமை) களைக்கட்டியது.

இங்கு பலவிதமான பூக்கள் பூத்து காணப்படுவதோடு, புதிய வகை பூக்கன்றுகளும் காணப்படுகின்றது. மேலும் பலவிதமான அழகிய கோணங்களில் பூக்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அரிய வகை மலர்கள் கண்கவரும் வகையில் பார்வையாளர்களுக்கு காட்சியளிக்கின்றது.




Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment