ஹட்டனில் திருவிழா மோதலில் ஒருவர் பலி, நால்வர் படுகாயம்!(VIDEO)


ஹட்டன் குடாஓயா தோட்டத்தில் நேற்று (18) இரவு 8 மணியவில் இடம்பெற்ற குழு மோதலில் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி ஸ்தலத்திலேயே பலியானதுடன் மேலும் நால்வர் படுகாயமடைந்து டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தந்தையான 28 வயதுடைய மணிவேல் புஸ்பராஜ் என தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஹட்டன் குடாஒயா தோட்டத்தில் இடம்பெற்ற 5, நாள் திருவிழாவில் இறுதிநாளான நேற்று மஞ்சல் நீராட்டு விழா இடம்பெற்ற வேளையில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலிலே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சம்பவத்தில் படுங்காயமடைந்த நால்வர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலும் ஒருவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சடலம் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இந்த மோதல் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment