இலங்கையில் வாழும் 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பொதுமக்களுக்கும் ‘அரச ஓய்வூதியம்’ வழங்கி உதவவேண்டும் என தெரிவித்து இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் சாதனைப் பயணம் நேற்று சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு வவுனியா ஸ்ரீகந்தசுவாமி ஆலய முன்றலில் தலைமையில் ஆரம்பமாகியது. வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கொடியினை அசைத்து பயணத்தினை ஆரம்பித்து வைத்தார்.
நேற்றைய தினம் வவுனியா, ஊடாக கிளிநொச்சி சென்று அங்கிருந்து வழியாக நேற்று இரவு 10 மணிக்கு பருத்தித்துறையை வந்தடைந்தார்.
இன்று அதிகாலை அங்கிருந்து தனது கலைத்துவ சாதனையை புரியும் வகையில் அதிகாலை பருத்தித் துறை ஊடாக வல்வெட்டித்துறை பண்டத்தரிப்பு என பயணித்த அவர் இன்று மாலை 5 மணிக்கு யாழ்ப்பாணப் கழகத்திற்கும் 6 மணிக்கு நல்லூர் ஆலயத்தையும் வந்தடைந்தார் . பல்வேறு நண்பர்கள், மக்கள், உறவுகள் என்று ஆர்வத்துடன் பலரும் வாழ்த்தை தெரிவித்தது வருகின்றனர். இன்று மாலை பூநகரி நோக்கி நகரும் இவ் சாதனைப் பயணம் சாதிக்கட்டும்.

0 comments:
Post a Comment