ஃபேஸ்புக் ராக்கெட் ஐகானின் நோக்கம் என்ன தெரியுமா?


ஃபேஸ்புக் நிறுவனம். தனது ஒவ்வொரு அப்டேட்டிலும் ஏதோ ஒரு புதிய விஷயத்தை அறிமுகம் செய்து வருகிறது.

அந்த வகையில் ஃபேஸ்புக் ஆப்பில் தற்போது புதிய அப்டேட்டில் உள்ள ராக்கெட் ஐகான் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஃபேஸ்புக் ராக்கெட் ஐகான் எதற்கு பயன்படுகிறது?

ஃபேஸ்புக்கின் புதிய அப்டேட்டில் உருவான ராக்கெட் ஐகான் மூலம் நீங்கள் இருக்கும் பகுதியின் பிரபலமான பதிவுகளை எளிதில் காண அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.அதாவது நீங்கள் ஒரு பக்கத்தை லைக் செய்திருக்க வேண்டிய எந்தவித அவசியமும் இல்லாமல் ஒரு தனி நபரின் வைரலாகும் பதிவுகளை கூட அவர்களின் நண்பராக இல்லாவிட்டாலும் அந்த பதிவை உங்கள் டைம்லைனில் பார்க்க இந்த ராக்கெட் ஐகான் உதவுகிறது.

அதாவது நீங்கள் ஒரு பக்கத்தை லைக் செய்திருக்க வேண்டிய எந்தவித அவசியமும் இல்லாமல் ஒரு தனி நபரின் வைரலாகும் பதிவுகளை கூட அவர்களின் நண்பராக இல்லாவிட்டாலும் அந்த பதிவை உங்கள் டைம்லைனில் பார்க்க இந்த ராக்கெட் ஐகான் உதவுகிறது.

மேலும் ஃபேஸ்புக்கின் இந்த ராக்கெட் ஐகான் பெரும்பாலும் வீடியோ மற்றும் ஃபேஸ்புக் இன்ஸ்டன்ட் ஆர்ட்டிகிள் பதிவுகளையே காட்டுகிறது.

ஃபேஸ்புக் உங்களது டைம்லைனில் நீங்கள் பதிவுடும் பதிவுகள், நீங்கள் விரும்பும் ஃபேஸ்புக் பக்கங்கள், நீங்கள் அதிகம் விரும்பும் விஷயங்கள் என ஒவ்வொருவருக்குமான தனி டேட்டாவை எடுத்து வருகிறது.

அதன் மூலம் ஒருவரது விருப்பம் என்ன என்பதை தெளிவாக கண்டறிந்து அவரது விருப்பத்துக்கு ஏற்ற பதிவை அவரது டைம்லைனில் நண்பர்கள் அல்லது நண்பர்களின் நண்பர்கள் என்ற அடிப்படையில் காட்டுகிறது.

ஆனால் இந்த ராக்கெட் ஐகான், நீங்களோ அல்லது உங்களது நண்பரோ விரும்பாத ஒரு பக்கத்திலிருந்து உங்களது விருப்பத்துக்கு ஏற்ற பதிவுகளை எளிதில் எடுத்து தர உதவுகிறது.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment