சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!


சட்டவிரோதமாக இலங்கை கடற்பகுதிக்குள் பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கோவிலன் பிரதேச கடற்பகுதியில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் உதவி கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்படவிருப்பதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இவர்கள் பயன்படுத்திய ரோலர் மீன்பிடி படகும் மேலும் சில மீன்பிடி உபகரணங்களும் கடற்படையினால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment