யாழ்.கோட்டை பண்ணை கடற்கரை பகுதி பொழுது போக்கு இடமாக மாற்ற நடவடிக்கை! (PHOTO,VIDEO)


யாழ்.கோட்டை பகுதியின் பின் புறமாக உள்ள பண்ணை கடற்கரை பகுதி அழகாக்கப்பட்டு பொழுது போக்கு இடமாக மாற்றப்பட்டு வருகிறது.

தற்போது பண்ணைக் கடலில் புதிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. கடலினுள் இறங்கி நடப்பதற்கு ஏற்ப பாலம் போன்று மக்கள் தமது பொழுதினைப் போக்குவதற்காக 40 மில்லியன் ரூபா செலவில் இத் திட்டங்கள் இடம் பெறுகின்றது.

இதற்காக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சும் யாழ் மாவட்ட செயலகம் மற்றும் யாழ் மாநகர சபை இதற்காக முழு அளவிலான பங்களிப்பினை வழங்குகின்றது .

அப்பகுதியில் மாலை வேளைகளில் பெருமளவான மக்கள் வந்து கடற்கரை அழகை ரசிப்பதோடு அங்கு நடைபயிற்சிகளையும் உடற்பயிற்சிகளையும் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் வேலனை சாட்டியிலும் இவ்வாறான நடவடிக்கைக்கு 34 மில்லியன் ரூபா செலவில் இச்செயற்றிட்டங்கள் இடம் பெறுகின்றன.












Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment