பொலிஸ் அதிகாரத்தை நாங்கள் பெற்றுக்கொள்வதற்கு எமது இளைஞர் யுவதிகள் பொலிஸ் உத்தியோகத்தில் இணைய வேண்டும் அழைப்பு விடுத்திருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவ்வாறு இணைவதனூடாகவே எமது பிரதேசத்தில் எம்மால் ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதை எமது இளைஞர்கள் உணரவேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.
வட மாகாண பொலிஸ் உத்தியோகத்தர்களை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கைதடியிலுள்ள தமது அலுவலகத்தில் இன்று சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின்பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்,
யுத்த காலத்தில் பொலிஸாருக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெற்றன. ஆனால் யுத்தத்தின் பின்னர் பொலிஸ் அதிகாரத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய இடத்தில் எமது இளைஞர் யுவதிகள் வரவேண்டும். அவ்வாறு வரும்போது தற்போதுள்ள பொலிஸார் மெல்ல மெல்ல தெற்குக்குச் சென்று விடுவார்கள். இளைஞர் யுவதிகளை பொலிஸ் சேவையில் இணைப்பதற்குரிய விண்ணப்பங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. 500 வெற்றியிடங்கள் காணப்படுகின்றன. பட்டதாரிகள் அதிலுள்ள மேல் மட்டப் பதவிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
0 comments:
Post a Comment