இன்றைய ராசிபலன் - 15.07.2017


மேஷம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து போகும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அநாவசிய செலவுகளை தவிர்க்க பாருங்கள். பழைய பிரச்னைகள் தலை தூக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.




ரிஷபம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சிறப்பான நாள்.




மிதுனம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மதிப்புக்கூடும். சாதித்துக் காட்டும் நாள்.




கடகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். எதிர்பார்த்த பணம்கைக்கு வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.




சிம்மம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப்பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தினர் சிலர் உங்கள் மனம் நோகும்படி பேசுவார்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக்கொள்ளாதீர்கள். வேலைச்சுமை மிகுந்த நாள்.





கன்னி: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.




துலாம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர்கள், நண்பர்களை சந்திப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். திடீர் யோகம் கிட்டும் நாள்.



விருச்சிகம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.





தனுசு: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துபோகும். புது வேலை அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.




மகரம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். மனைவி வழியில் ஆதாயம் உண்டு. சொத்து சிக்கலில் ஒன்று தீரும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.




கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். முகப்பொலிவுக் கூடும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.




மீனம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment