ஈழத்து புரட்சிப்பாடகர் எஸ்.ஜி.சாந்தன் மரணிக்கவில்லையென வைத்திய வட்டாரங்கள் தகவல்... (VIDEO)


புங்குடுதீவு மண்ணின் மைந்தன், புரட்சி பாடகன் எஸ்.ஜி.சாந்தன் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தது.

இவரது மகன் கோகுலன் சாந்தனின் முகநூல் பதிவினை அடுத்தே இலங்கையின் அனைத்து தேசிய, இணைய, முகநூல் வட்டாரங்கள் இச்செய்தியினை பிரசுரித்து இருந்தன.

ஆயினும் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து கிடைக்கும் தகவலின்படி தற்போது வரை அவர் உயிரோடு இருப்பதாகவும், தொடர்ந்து போராடி வருவதாகவும் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து இவரது மகன் தற்போது தனது முகநூலில், “அப்பாவின் நிலையினை கூறிய வைத்தியர்கள் அவரது அனைத்து அசைவுகளும் அடங்கிய நிலையிலும் நாடித்துடிப்பு காணப்படுவதாய் கூறி தங்கள் முழு முயற்சியையும் மேற்கொண்ட வண்ணம் உள்ளார்கள். அப்பா நலன் பெற அனைவரும் இறைவனை வேண்டுவோம்.” எனப் பதிவிட்டு உள்ளார்.



 (VIDEO)
https://www.facebook.com/kokulan.santhan/videos/1195727367220176/




Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment