இசையின் வழியே ஈழமக்களின் இதயங்களில் நீங்காத இடம்பிடித்த ஈழத்தின் உணர்ச்சிப் பாடகர் சாந்தன் உடல்நலக்குறைவால் இன்று மதியம் 02.10 க்கு உயிரிழந்துள்ளார்.
அண்மைக்காலமாக தன் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சையினை மேற்கொள்ள பலபேரின் உதவியினை கோரியிருந்தார். ஆனாலும் அவருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தவேளையில் இன்று அவருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து அவருக்கு செயற்கை சுவாசம் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்த போதிலும், இன்று மதியம் 02.10 உயிரிழந்துள்ளாதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஈழத்தின் கலைத்துறையின் வளர்ச்சிப் போக்கில் தன் இசை மூலம் புலத்திலும் புலம்பெயர் தேசத்திலும் அதிகமான ரசிகர்களை பெற்றவர். ஈழத்தின் வலிகளை தன் குரல் மூலம் எல்லோர் மனங்களிலும் ஆழமாக பதித்தவர் S.G சாந்தன்.
சாந்தன் அவர்கள் ஆரம்ப காலங்களில் தன் பாடல்கள் மூலமாக மக்களோடு மக்களாக அதிகம் நெருக்கமானர். பின்னர் ஈழத்தின் குறிப்பிடதக்க பக்தி பாடல்களை பாடி தன் பின்னைய காலங்களை கழித்தவர். பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார் இவர் கொட்கட்டிச்சோலையில் உருவானார் என்ற புகழ் பூத்த பாடலை பாடி தமிழ் மக்களின் மனங்களில் இடம்பிடித்தவர் என்பது குறிப்படதக்கது.

0 comments:
Post a Comment