நாவலபிட்டியில் பேருந்து விபத்து: 53 பேர் காயம்!


நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி – குருந்துவத்தை பிரதான வீதியில் நாவலப்பிட்டி பகுதியிலிருந்து குருந்துவத்தை பகுதியை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று செம்ரோக் எனும் பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று  (புதன்கிழமை) மதியம் 12.30 மணியளவில் இவ்விபத்து  இடம் பெற்றுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்தில் 53 பேர் படுங்காயங்களுக்குள்ளாகி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் இதில் சிலர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்விபத்தில் பாடசாலை மாணவர்களும் காயங்களுக்குள்ளாகியிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment