இன்றைய ராசிபலன் - 09.04.2017


மேஷம்: எதிர்பாராத பண வரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந் தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். தொட்டது துலங்கும் நாள்.





ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர் களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.





மிதுனம்: எதிர்ப்புகள் அடங் கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப் பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.





கடகம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். உங்களால் மற்றவர் கள் ஆதாயமடைவார்கள். அரசால் அனு கூலம் உண்டு. வியாபாரத்தில் புது யுக்தி களை கையாளுவீர்கள். வெற்றி பெறும் நாள்.





சிம்மம்: காலை 7.35 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வீண் டென்ஷன் வந்து போகும்.  நண்பகல் முதல் கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். அழகு, இளமைக் கூடும். பணப் புழக்கம் கணிசமாக உயரும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.





கன்னி: காலை 7.35 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் வேலைச்சுமை யால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.





துலாம்: வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.





விருச்சிகம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பணம் வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வீடு வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.





தனுசு: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்து வீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். மற்றவர் களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.





மகரம்: காலை 7.35 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பம் வந்து நீங்கும். நண்பகல் முதல் குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். தடைகள் உடைபடும் நாள்.





கும்பம்: காலை 7.35 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். கணவன்- மனைவிக்குள் மன ஸ்தாபம் வந்து நீங்கும். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். போராட்டமான நாள்.





மீனம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரங் களால் பயனடைவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். நன்மை கிட்டும் நாள்.

Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment