மலிங்காவை கழற்றிவிட்ட பயிற்சியாளர் மஹேல!


10 வது IPL தொடரின் நேற்று(22) இடம்பெற்ற மும்பாய் இந்தியன்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் அந்த அணியின் முக்கிய பந்து வீச்சாளரான மலிங்க இணைத்துக்கொள்ளப்படவில்லை.

மஹேல ஜெயவர்த்தனவின் பயிற்றுவிப்பில் இந்த IPL போட்டி தொடரில் தொடர்ச்சியான 6 வெற்றிகளை பெற்ற மும்பாய் இந்தியன்ஸ் அணிக்கு,இன்று மலிங்காவை இணைத்துக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டது.

அவர் இறுதியாக விளையாடிய இரு போட்டிகளிலும் 50 க்கும் அதிகமான ஓட்டங்களை விட்டுக்கொடுத்துள்ளமை இதற்கு பிரதான காரணமாகும்.

குஜராத் லயன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 51 ஓட்டங்கள் கொடுத்து ஒரேயொரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார்.

கிங்ஸ் XI பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் 5 சிக்ஸர்கள் அடங்கலாக 58 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்த மலிங்கவால் எந்தவொரு விக்கெட்டையும் கைப்பற்ற முடியவில்லை.

மலிங்க தனது இறுதி இரு போட்டிகளிலும் சேர்த்து 8 சிக்ஸர்களையும்,7 பவுண்டரிகளையும் கொடுத்து 109 ஓட்டங்களை வாரிவழங்கி ஒரேயொரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியுள்ளார்.

மலிங்காவின் பந்துவீச்சு திருப்தியான நிலையில் அமையாத காரணத்தால் பயிற்சியாளர் மஹேல, மலிங்காவை கழற்றிவிட்டு ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஜோன்சனுக்கு வாய்ப்பை கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment