யாழ்.பல்கலைகழக புதிய துணைவேந்தர் பதவியேற்பு!


யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் இன்று(01) காலை பதவியேற்றார். பல்கலைக்கழக வளாகத்திலுள்ள ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அவர் உத்தியோகப்பூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் விக்னேஸ்வரன், ஜனாதிபதியால் கடந்த வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்ட நிலையில் இன்று பதவியேற்பு விழா இடம்பெற்றுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தில் இதுவரை காலமும் துணைவேந்தராக கடமையாற்றிய பேராசிரியர் வசந்தி அரசரட்ணத்தின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில் பேராசிரியர் விக்னேஸ்வரன் யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்படுவதாக ஜனாதிபதி செயலகத்தினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment