பாகுபலி படத்தில் பல்லாள தேவனாக நடித்து புகழ் பெற்றவர் ராணா. இந்த படத்திற்காக அவர் கடினமாக உழைத்துள்ளார். படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் பிரபாஸுடன் சேர்த்து ராணாவையும் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
பாகுபலி இரண்டாம் பாகம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டி இருக்கிறது. இந்தப் படத்தின் வெற்றிக்கு ராணாவின் நடிப்பும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராணா இரண்டு சிறுவர்களுக்கு அளித்த ஆலோசனையில்,
''எனக்கு வலது கண் தெரியாது. எனது இடது கண்ணை மூடிக் கொண்டு பாருங்கள் என்று கூறினால், என் முன்பு இருக்கும் பொருட்களை என்னால் பார்க்க முடியாது. தற்போது நீங்கள் பார்த்துக் கொண்டு இருக்கும் கண்ணும் வேறொருவர் இறக்கும் முன்பு எனக்கு தானமாக கொடுத்தது. சிறுவர்களே நீங்கள் இருவரும் நல்ல சிறுவர்களாக தெரிகிறீர்கள். நீங்கள் இருவரும் உங்களது வயதான தாத்தா, பாட்டி, பெற்றோரை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும்'' என்று உருக்கமாக தெரிவித்தார்.
2016ம் ஆண்டில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

0 comments:
Post a Comment