ரோஹித் சர்மாவின் அரைச்சதத்தின் உதவியுடன் போராடி வென்றது மும்பை, பெங்களூரின் சோகம் தொடர்கிறது!


பத்தாவது ஐபிஎல் தொடரில் இன்று(01) இடம்பெற்ற முப்பத்து எட்டாவது போட்டியில் மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்டன.

முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி இருபது ஓவர்கள் நிறைவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.துடுப்பாட்டத்தில் யாரும் சொல்லும் படியாக பிரகாசிக்கவில்லை வில்லியர்ஸ் தலா மூன்று சிக்சர்கள் மற்றும் பவுண்டரிகள் அடங்கலாக 43 ஓட்டங்களையும் நெகி ஒரு பவுண்டரி மூன்று சிக்சர் அடங்கலாக 35 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர். பந்து வீச்சில் மெக்லிங்கன் மூன்று இலக்குகளையும் குர்னல் பாண்டியா இரு இலக்குகளையும் கரன் சர்மா மற்றும் பூம்ரா தலா ஒவ்வொரு இலக்கினையும் சாய்த்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை அணி ரோகித் சர்மாவின் அரைச்சத துணையுடன் ஒருபந்து மீதமாக இருக்க வெற்றியை உறுதிசெய்தது. துடுப்பாட்டத்தில் ரோகித் சர்மா ஆறு பவுண்டரிகள் ஒரு சிக்சர் அடங்கலாக 56 ஓட்டங்களையும் பட்லர் 33 ஓட்டங்களையும் அதிகமாக பெற்றனர். பந்துவீச்சில் நெகி இரு இலக்குகளையும் சகால்,வட்சன் மற்றும் சொய்ட்ஹரி தலா ஒவ்வொரு இலக்கினையும் வீழ்த்தினர். இறுதியில் மும்பை அணி ஐந்து விக்கெட்டுகளால் வெற்றி பெற்றதோடு புள்ளி பட்டியலில் முதலிடத்திலுள்ளது. பெங்களூருக்கு இது எட்டாவது தோல்வியாகும் .போட்டியின் ஆட்டநாயகனாக ரோகித் சர்மா தெரிவானார்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment