யாழ்ப்பாணத்தில் சர்வதேச நடன தின நிகழ்வு!


சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில்வடக்கு மற்றும்  மத்திய மாகாண பிரபல நடன ஆசிரியர்களின் நெறியாள்கையில் உருவான நடன அளிக்கைகளின்  தொகுப்பான '' ஆடல் அரங்கம் '' நடன நிகழ்வு (29.04.2017)  யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில்   நடைபெற்றது.

பொம்மலாட்டக் குழுவினரின் மான் ஆட்டம் , மயில் ஆட்டம் , ஆகியவற்றுடன்  அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் ஆரம்பமானது.

திருமதி சாந்தி நட்ராஜனின் மங்கள விளக்கேற்றலினைத் தொடர்ந்து ஈழத்து நடன அரங்கின் முன்னோடிகளும் விளக்கேற்றிக் கொண்டனர்.
மேலும் , ஷாந்தினி சிவநேசன் ,  கிருசாந்தி ரவீந்திரா ,பத்மினி செல்வேந்திர குமார், சிவந்தி ராமமூர்த்தி , உமா ஸ்ரீதரன் , யாழ். கல்வி வலய நடன ஆசிரியர்கள். யாழ்.இந்து மகளீர் கல்லூரி  நடன ஆசிரியர்கள் மற்றும் நாகேஸ்வரன்  ஆகியோரின்  நெறியாள்கையில் நடன ஆற்றுகைகள் இடம் பெற்றன.

சாரி நடனம், கிராமிய நடனம் , குச்சுப்பிடி, நாட்டிய நாடகம் உட்பட மிகப் பிரமாண்டமான வித்தியாசமான தொழில் நுட்பப் பண்பாட்டுடன் கூடிய நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன . மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன்  கலை ஆர்வலர்களின் மத்தியில் இந்நிகழ்வு பெரும் வரவேற்பை பெற்றுள்ளமை மிகையல்ல. மேலும்  யாழ். இந்திய துணைத் தூதரகத்தினால்  மதுரை மல்லி மாலையும்  பெண்களுக்கு இலவசமாக வழங்கப் படடமையும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. ​

படங்கள்: ஐ.சிவசாந்தன்​



























































Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment