நாடு பூராகவும் விசேட சுற்றிவளைப்பு 1246 பேர் கைது!


நாடு பூராகவும் திடீரென மேற்கொள்ளப்பட்ட, விசேட சுற்றிவளைப்புகளின் மூலம் பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகள் உள்ளிட்ட 1246 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைக்காக 11,795 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

இதன்போது கைது செய்யப்பட்டவர்களுள் 110 குற்றவாளிகளும், வான்படையில் இருந்து தப்பிச் சென்ற 4 பேரும் கடற்படையிலிருந்து தப்பிச் சென்ற 3 பேரும் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது.

கடந்த இரண்டு தினங்களாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 567 பேரும், பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 109 பேரும், கஞ்சா போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த 45 பேரும் ஹெரொயின் வைத்திருந்த 26 பேரும் கைது செய்யப்பட்டனர்
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment