பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து சாவகச்சேரி மீசாலைப் பிரதேசத்தில் வயலில் இருந்து 213 கிலோ கஞ்சா, இன்று (வெள்ளிக்கிழமை) கைப்பற்றப்பட்டுள்ளது.
மேற்படி கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சாவினது மொத்தப் பெறுமதி சுமார் 2 கோடி ரூபாவரை இருக்குமென தெரிவிக்கப்படுவதுடன், இன்று நீதிமன்றில் ஒப்படைக்கப்பட இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை எனவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக யாழில் அதிகளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருவதுடன் அதனுடன் தொடர்புடைய குற்றச் செயல்களும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.




0 comments:
Post a Comment