‘என்னை அறிந்தால்’ படத்தில் விக்டர் என்ற வில்லன் அவதாரம் எடுத்த அருண்விஜய், ‘குற்றம் 23’ படத்தில் வெற்றிமாறன் என்ற ஹீரோ அவதாரம் எடுத்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார். கடின உழைப்புக்கு என்றுமே தோல்வி இருந்ததில்லை என்பதற்கு அருண்விஜய் ஒரு உண்மையான உதாரணம் என்பது இந்த படத்தின் வெற்றியால் நிரூபணம் ஆகியுள்ளது.
இந்நிலையில் ‘குற்றம் 23’ படத்தின் கடந்த வார சென்னை வசூல் குறித்த விபரங்களை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் மூன்று நாள் தமிழக வசூல் குறித்து தற்போது பார்ப்போம்
‘குற்றம் 23’ திரைப்படம் தமிழகத்தில் மூன்று நாட்களில் சுமார் ரூ.4 கோடி வசூல் செய்துள்ளது. சென்னையில் ரூ.60 லட்சம், செங்கல்பட்டு பகுதியில் ரூ.1.18 கோடி மற்றும் கோவையில் ரூ.60 லட்சம் இந்த படம் வசூல் செய்து அருண்விஜய் படங்களின் மிகச்சிறந்த ஓப்பனிங் வசூல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

0 comments:
Post a Comment