வளர்ப்புத் தாயினால் தாக்கப்பட்டு 4 வயது சிறுவன் உயிரிழப்பு?! (PHOTO,VIDEO)


மட்டக்களப்பு – நாவற்குடா – மாதர் வீதியில் வசித்துவந்த 4 வயது சிறுவன் ஒருவர், தனது வளர்ப்புத் தாயின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக சிறுமியின் வளர்ப்புத் தாய் காத்தான்குடி பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். 50 வயதான குறித்த தாய் நூலகமொன்றில் பணியாற்றுபவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுவனை குறித்த சிறுவனை குறித்த பெண் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பாக தத்தெடுத்து வளர்த்துவந்துள்ளதாகவும் அயலவர்கள் தெரிவித்தனர்.

ஏற்கனவே ஒரு பெண்பிள்ளையினை தத்தெடுத்துவளர்த்துவந்த நிலையிலேயே குறித்த சிறுவனையும் தத்தெடுத்து வளர்த்துவந்துள்ளதாகவும் அயவர்கள்தெரிவித்தனர்.

இதேவேளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்ற மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டார்.









Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment