இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'விஜய் 61' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது என்பதும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் விஜய் முதல்முறையாக 'விஜய் 61' படத்தில் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. மூன்று வேட படம் என்றவுடன் அனைவருக்கும் ஞாபகம் வருவது ரஜினியின் 'மூன்று முகம்' படம் என்பது போல இந்த படம் விஜய்யின் மூன்று முகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
விஜய் இதற்கு முன்னர் அழகிய தமிழ்மகன்', 'புலி' 'கத்தி' ஆகிய படங்களில் இரண்டு வேடங்களில் நடித்துள்ள நிலையில் முதல்முறையாக மூன்று வேடங்கள் ஏற்று நடிக்கும் இந்த படத்திற்கு பெரும் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், வடிவேலு, சத்யராஜ், கோவை சரளா மற்றும் எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார்.இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் மூவீஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

0 comments:
Post a Comment