குழந்தை எதற்காக அழுகிறது? இதோ கண்டுபிடிக்கும் “Apps”


குழந்தையின் அழுகுரலினை வைத்தே அக்குழந்தை என்ன காரணத்திற்காக அழுகிறது என்பதனை கண்டுபிடிக்கும் புதிய மொபைல் அப்ளிகேஷன்(Mobile Apps) அறிமுகமாகியுள்ளது.

The Infant Cries Translator என்ற இந்த அப்ளிகேஷனில் இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் அழுகை சத்தங்கள், மற்றும் அக்குழந்தைகள் அழும் பல்வேறு நேரங்கள் சேகரித்துவைக்கப்பட்டுள்ளன.

அதனை அடிப்படையாக கொண்டு இந்த அப்ளிகேஷன், அக்குழந்தை எதற்காக அழுகிறது என்பதை கண்டுபிடித்து விடுகிறது.

குழந்தைகள் பசியால் அழுகிறதா, தூக்கத்திற்காக அழுகிறதா அல்லது ஏதேனும் வலியால் அழுகிறதா என்பதனை 92 சதவீதம் துல்லியமாக கண்டுபிடித்துவிடும் அப்ளிகேஷன் ios மற்றும் Android – களில் வெளியிடப்பட்டுள்ளது.

தைவான் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 2 ஆண்டுகள் நடத்திய ஆராய்ச்சிக்கு பிறகு இந்த அப்பிளிகேஷனை கண்டுபிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment