விஜய்யின் ஆரம்ப கால படங்களை நினைவுகூர்ந்தால் அதன் பாடல்கள் இன்றளவும் பேசப்படுவது நமக்கு புரியும். இதற்கு முக்கிய காரணம் அந்த பாடல்கள் படமாக்கப்பட்ட விதங்களே.
குஷி படம் என்றாலே சட்டென நம் நினைவுக்கு வருவது மொட்டு ஒன்று பாடலின் தொடக்கத்தில் கையை ஆட்டிக்கொண்டே உயரத்திலிருந்து கயிறு கட்டி கீழே குதிக்கும் விஜய்யின் முகம்தான்.
முதலில் இந்த காட்சியில் டூப் போடலாம் என படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் விஜய்தான் நானே இதை செய்கிறேன் என கூறியதோடு இன்று வரையிலும் அந்த காட்சியை சிலாகித்து பேசும் வகையில் அதில் சிறப்பாக நடித்திருப்பார். இதேபோல் செல்வா, திருமலை, தெறி என பல படங்களில் விஜய் டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:
Post a Comment