முறுகண்டியில் புகையிரதமும் கயஸ் வானும் விபத்துக்குள்ளாகின!


முல்லைத்தீவு  முறுகண்டிப் பகுதியில் இன்று முற்பகல்  11.30 மணியளவில்   புகையிரதமும்  கயஸ்  வானும் விபத்துக்குள்ளானதில்  கயஸ் வாகன  சாரதி  அதிஸ்டவசமாக  காயங்கள் ஏதுமின்றி  உயிர்  தப்பினார். ஸ்கந்தபுரம்  பகுதியிலிருந்து கிளிநொச்சியை  நோக்கி வந்துகொண்டிருந்த  கயஸ் வாகனம் முறுகண்டிப்பகுதியில் உள்ள  புகையிரத கடவையை  கடக்க முயன்றபொழுது  கடவையில்  இருந்த  சமிக்கை விளக்கு சரியாக வேலைசெய்யாமையால்  யாழில் இருந்து கொழும்பு  சென்றுகொண்டிருந்த  புகையிரதத்துடன் மோதுண்டு  விபத்துக்குள்ளானதாக  தெரிவிக்கப்படுகின்றது

குறித்த கயஸ்  வாகனத்தில் சாரதிமட்டுமே  பயணித்தமையால்  உயிர்ச் சேதங்கள் எவையும் இடம்பெறவில்லை. வடமாகாணத்தை  பொறுத்தவரை  பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளினாலும்  சமிக்கை  விளக்குகள் சீரின்மையாலும்  பல விபத்துக்கள் இடம்பெற்றுள்ள போதும்  இதுவரை மாற்று நடவடிக்கைகள்  ஏதும்  செய்யப்படவில்லை என  கல்வியியலாளர்கள்  குற்றம் சுமத்துகின்றனர் .




Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment