யாழ்.குடாநாட்டின் பல்வேறு இடங்களிலும் இன்று அடை மழை பெய்துள்ளது.
பிற்பகல் 03.30 மணி முதல் பிற்பகல் 06.30 மணி வரை அடை மழை கொட்டித் தீர்த்துள்ளது.
கடந்த பல நாட்களாக யாழ்.குடாநாட்டில் கடும் வெயில் வாட்டி எடுத்துள்ள நிலையிலேயே இந்தத் திடீர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. பகல் முழுவதும் மப்பும் மந்தாரமுமான கால லை நீடித்த நிலையிலேயே திடீரென மழை பொழிந்துள்ளது.
கடும் மழை காரணமாகத் தாழ் நிலங்கள் பலவற்றிலும், வீதிகள் பலவற்றிலும் அதிக வெள்ள நீர் தேங்கி நின்றமையை அவதானிக்க முடிந்தது. திடீர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.
இன்று கொட்டித் தீர்த்த அடை மழை மாரி காலத்தை ஞாபகப்படுத்துவதாய் அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





0 comments:
Post a Comment