நீர்வேலியில் துணிகரத் திருட்டு!


யாழ்ப்பாணம்  நீர்வேலி வடக்கு (மாசுவன்) பகுதியில் உள்ள வீடு ஒன்றினை உடைத்த திருடர்கள் 23 பவுண் நகைகள் மற்றும் 95 ஆயிரம் ரூபா பணம் என்பவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் 03.03.2017 அன்று  பகல் நீர்வேலி வடக்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன்போது 9 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகள் களவாடப்பட்டுள்ள. வீட்டில் இருந்த அனைவரும் வெளியில் சென்ற நேரம் பார்த்துத் திருட்டு இடம்பெற்றுள்ளது. வாழைக்குலை வியாபாரம் செய்து தனது வாழ்க்கையினை கொண்டு நடத்தும் மேற்படி குடும்பஸ்தர் காலை சந்தைக்கு சென்றுள்ளார். வீட்டில் இருந்தவர்களும் தனிப்பட்ட அலுவல்கள் காரணமாக வெளியில் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் காலை 6 மணிக்கும்-12 மணிக்கும் இடைப்பட்ட நேரம் பார்த்து பின்கதவினை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளனர். வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் சல்லடை போட்டு தேடிவிட்டு அலுமாரியை உடைத்துள்ளனர். இதன்போது அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த அட்டியல், தோடு,காப்பு மற்றும் கைச்செயின் உட்பட 23 பவுண் நகைகளையும் வாழைக்குலை விற்ற 95 ஆயிரம் ரூபா பணத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விரிவான விசாரணைகளை குற்றம் நடந்த இடத்தினை ஆராயும் பொலிஸாரின் உதவியுடன் கோப்பாய் குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment