ஈரம் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான குற்றம் 23 திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ஹீரோவாக அருண் விஜய்க்கு சிறந்த கம் பேக் என ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
எனவே தனது அடுத்த படத்தை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார் அருண் விஜய். அந்தவகையில் தடையற தாக்க படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனியுடன் இவர் மீண்டும் ஒரு படத்தில் இணையபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

0 comments:
Post a Comment