நம் மத்தியில் மிக பிரபல்யமாகும் சமூக வலைத்தளம் என்றால் அது facebook மட்டுமே.பாவிக்க இலகுவானதாகவும் அதிகமானோரின் மனம் கவர்ந்த சமுக வலைத்தளம் face book ..நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக facebook நிறுவனமும் புதிய புதிய அறிமுகங்களை மேற்கொண்டு வருகின்றது.
இதுவரையில் facebook இல் டிஸ்லைக் பட்டன் அறிமுகப்படுத்தப்படவுள்ளதோடு ஒரு சில ரியாக்ஷன் பட்டேனும் அறிமுகபடுத்தவுள்ள facebook அடுத்தகட்டமாக messenger day எனும் புதிய வசதியை அறிமுகம் செய்யவுள்ளது.
சில நாடுகளில் ஏற்கனவே பரீட்சிக்கப்பட்ட நிலையிலேயே உலகெங்கிலும் andriod மற்றும் ios சாதனங்களுக்கான அறிமுகம் செய்யப்படுகின்றது.இதனூடாக அடுத்தடுத்து நாம் செய்யவிருக்கும் நடவடிக்கைகளை விடயங்களை நண்பர்களோடும் உறவினர்களோடும் பரிமாறிக்கொள்ள முடியும்.
அதுமட்டுமல்லாது குறிப்பிட்ட நண்பர்களுடன் மட்டும் தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும்.இதனால் நமது எதிர்கால செயற்பாடுகளை முற்கூட்டி அறிந்துகொள்ளக்கூடிய வசதியும் காணப்படுகின்றது.
புதிய புதிய அம்சங்களை வழங்கி அதிகமானோரை கவர்ந்துள்ள facebook நிறுவனம் மிக விரைவில் 2 பில்லியன் வாடிக்கையாளர்களை எட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment