வவுனியாவில் காதல் விவகாரத்தால் வாள் வெட்டுத்தாக்குதல், பெண்ணின் வீடு தீக்கிரை! (PHOTO, VIDEO)


வவுனியாவில் காதல் விவகாரத்தினால் வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன் இனந்தெரியாத நபர்களினால் வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா தரணிக்குளத்தில் வசித்து வரும் இருவருக்கிடையே காதல் ஏற்ப்பட்டுள்ளது. ஒருவருடகாலமாக இவர்களது காதல் பெற்றோர்களுக்கு தெரியாமலேயே இருந்துள்ளது. இவர்களது காதல் பெண் வீட்டாருக்கு தெரியவந்ததுடன் பெண் வீட்டார் குறித்த பெண்ணை வெளிநாடு ஒன்றிக்கு அனுப்புவதற்குறிய ஏற்ப்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

இதனையறிந்த பெண் தனது காதலனுக்கு இவ்விடயத்தினை தெரிவித்துள்ளார். வெளிநாடு சென்றால் நான் இறந்து விடுவேன் என்றும் தன்னை எங்காவது கூட்டிச் செல்லுமாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் நடைபெற்று ஒருவாரத்தின் பின்னர் இருவரும் வீட்டை விட்டு ஓடிச்சென்று கொழும்பில் தனிமையில் ஒருமாத காலம் வாழ்த்து வந்துள்ளனர்.

பெண் வீட்டார் இவர்களை தேடியுள்ளனர். இவர்கள் கிடைக்காவிடத்து பெண்ணின் புகைப்படத்தினை முகநூலில் பிரசுரித்து இவரை காணவில்லை கண்டுபிடித்த தருபவர்களுக்கு தகுந்த சர்மானம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இவர்களின் முகநூல் பதிவினை கண்ணுற்ற ஒருவர் இவர்களை கொழும்பில் வைத்து அடையாளம் கண்டுள்ளார். உடனே இவர்களின் முகநூல் பதிவில் காணப்பட்ட தொலைபேசிக்கு அழைப்பினை மேற்கொண்டு அவர்கள் இங்கு உள்ளனர் என தெரிவித்துள்ளார். கொழுப்பிற்கு விரைந்த பெண் வீட்டார் குறித்த பெண்ணை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து தப்பித்து வவுனியாவிற்கு வந்த குறித்த பெண் தனது காதலனுக்கு தொலைபேசியில் அழைப்பினை மேற்கொண்டு தான் தற்போது வவுனியாவில் நிற்பதாகவும் என்னை அழைத்துச் செல்லுமாறு தெரிவித்துள்ளார்.

உடனே வவுனியாவிற்கு சென்ற குறித்த இளைஞன் பெண்ணை அழைத்து ஈச்சங்குளம் பொலிஸ்நிலையத்திற்கு சென்றுள்ளார். பெண் வீட்டாரிடமிருந்து தங்களுக்கு பாதுகாப்பு தருமாறு பொலிசாரிடம் வேண்டியுள்ளார்.

ஈச்சங்குளம் பொலிஸார் குறித்த பெண் மற்றும் இளைஞனை சேர்ந்து செல்லுமாறு பணித்துள்ளனர். இருவரும் குறித்த இளைஞனின் வீட்டில் இருந்த சமயத்தில் நேற்றுமுன்தினம்  (11.03.2017) மதியம் 2.30 மணியளவில் பெண் வீட்டார் வெள்ளை நிற வாகனத்தில் இளைஞனின் வீட்டிற்குச் சென்று வீட்டில் இருந்தவர்கள் மீது வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொண்டு குறித்த பெண்ணை அழைத்துச் சென்றுள்ளனர்.

இதன் பின்னர் குறித்த பெண்ணின் வீட்டை இனந்தெரியாத நபர்கள் தீக்கிரையாக்கியுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் மற்றும் தடவியல் பிரிவினர் தீக்கிரையான வீட்டில் கைரேகையடையாளங்களை பார்வையிட்டதுடன் குறித்த இளைஞனின் வீட்டார் மீது தாக்குதல் மேற்கொண்ட வாள்கள் மற்றும் பாரிய கத்திகளை கைப்பற்றியுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.











Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment