யாழில் கணவனின் கோடரி வெட்டுக்கு இலக்காகிய மனைவி ஆபத்தான நிலையில்! (VIDEO)


யாழ்.திருநெல்வேலி பகுதியில் கணவனின் கோடரி வெட்டுக்கு இலக்காகிய மனைவி படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபப்ட்டு உள்ளார்.  யாழ்,கல்வியங்காடு 3ஆம் கட்டை பகுதியை சேர்ந்த செந்தூரன் ஜெயவதனி எனும் பெண்ணே கோடரி வெட்டுக்கு இலக்காகி உள்ளார்.

இது குறித்து மேலும்  தெரிய வருவதாவது,

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக பிரிந்து வாழ்த்து வருகின்ற நிலையில் மனைவி திருநெல்வேலி சந்தைக்கு அருகில் அழகு படுத்தல் (ப்யூட்டி பாலர்) நிலையம் ஒன்றினை நடாத்தி வருகின்றார்.

இன்றைய தினம் வழமை போன்று தனது நிலையத்தை திறந்த போது கணவன் திடீரென நிலையத்திற்கு புகுந்து கோடரியினால் மனைவியை வெட்டி படுகொலை செய்ய முயன்று உள்ளார்.

தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த பெண் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கோப்பாய் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment