ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நயினாதீவுக்கு இன்று திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
தனது பாரியாருடன் நயினாதீவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நயினை நாகபூசணி அம்மான் ஆலய தரிசனத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, புத்தபிரானின் பாதம்பதிந்த வரலாற்றுபெருமைமிக்க நயினாதீவு ரஜமகா விகாரைக்கு இன்று முற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அங்கும் வழிபாடுகளில் ஈடுபட்டார்.
விகாராதிபதி நவந்தகல பதுமகித்திதிஸ்ஸ தேரரைத் தரிசித்து, அவரது நலன்களை விசாரித்து துறவிகளுக்கான காணிக்கையை செலுத்தினார். பின்னர் சமய வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி, நயினாதீவு புராண ரஜமகா விகாரையிலுள்ள அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார்.
ருவன்வெலிமகாசாய விகாராதிபதி வண. பல்லேகம ஹேமரதன நாயக்க தேரரும் ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




0 comments:
Post a Comment