10 வது IPL தொடரின் நேற்று இடம்பெற்ற 10 வது போட்டியில் வோர்னர் தலைமையிலான நடப்பு சாம்பியன்கள் சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் மற்றும் மஹேல பயிற்றுவிக்கும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பாய் இந்தியன்ஸ் அணிகள் போட்டியிட்டன.
மும்பாய் வான்கடே மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பாய் இந்தியன்ஸ் அணித்தலைவர் ரோஹித் சர்மா முதலில் களத்தடுப்பு முடிவை மேற்கொண்டார்.
அதன்படி முதலில் ஆடிய சன் ரஸெர்ஸ ஹைதராபாத் அணிக்கு ஆரம்ப வீரர்களான அணித்தலைவர் வோர்னர் மற்றும் தவான் அதிரடி ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர்.
10.2 ஓவர்களில் 81 ஓட்டங்களைப் பெற்ற வேளையில் முதல் விக்கெட் சரிக்கப்பட்டது.
ஆயினும் அதன் பின்னர் ஆடுகளை புகுந்த யுவ்ராஜ்,டீப்பாக் ஹூடா ,தமிழக வீரர் விஜய் ஷங்கர் ஆகியோர் ஒற்றை இலக்கங்களில் நடையைக் கட்ட அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 158 ஓட்டங்கள் பெற்றது.பூம்ரா 3 விக்கெட்டுக்களையும், ஹர்பஜன் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு 159 எனும் இலக்குடன் களம் புகுந்த மும்பாய் இந்தியன்ஸ் அணிக்கு, கடந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதுவென்ற நிதிஷ் ராணா அதிரடியாக 36 பந்துகளில் 45 ஓட்டங்கள் பெற்றுக்கொடுத்தார், குருனால் பாண்ட்யாவும் 20 பந்துகளில் 37 ஓட்டங்கள் பெற்றுக்கொடுக்க, மும்பாய் இந்தியன்ஸ் அணி 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் சொந்த மண்ணில் இலகுவான வெற்றி பெற்றது.
இவ்விரு அணிகளும் தலா 3 போட்டிகளில் விளையாடி இரு வெற்றிகளை இதுவரை பெற்றுள்ளன.ஆட்ட நாயகன் விருதை பூம்ரா தனதாகின்னார்.

0 comments:
Post a Comment