ஹற்றன் – கொழும்பு பிரதான வீதியில் வெற்றுப்பால்மா பைகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மொறட்டுவ பகுதியிலிருந்து அம்பேவெல நோக்கி பயணித்த லொறியொன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் லொறியின் சாரதியும், உதவியாளரும் காயமடைந்த நிலையில், டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை ஹற்றன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:
Post a Comment