IPL2017ஐ அசத்தலான வெற்றியுடன் ஆரம்பித்த நடப்பு சாம்பியன்களான சன் ரைசேர்ஸ் ஹைதராபாத்!


நேற்று ஆரம்பமான 10 வது IPL தொடரின் முதல் போட்டி, நடப்பு சாம்பியன்களான வோர்னர் தலைமையிலான சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் வொட்ஸன் தலைமையிலான ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் இடையில் இடம்பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற வொட்ஸன் தலைமையிலான ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் களத்தடுப்பு முடிவை மேற்கொண்டது.

அதன்படி முதலில் ஆடிய சன் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணிக்கு தவான் , யுவராஜ், ஹென்றிக்ஸ் ஆகியோரின் அதிரடி கைகொடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 207 ஓட்டங்கள் பெற்றது.

இந்தப் போட்டியில் வெற்றிபெறுவதற்கு ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 208 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

208 எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஹோக்லி மற்றும் டீ விில்லியர்ஸ் இல்லாத ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, எதிர்பார்த்தளவில் பிரகாசிக்காத நிலையில் 35 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

இதன்மூலமாக நடப்பு சாம்பியன்களான சன் ரைசேர்ஸ் அணி இந்த IPL பருவகாலத்தில் தொடரை அசத்தலுடன் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆட்ட நாயகனாக 27 பந்துகளில் 62 ஓட்டங்களை பெற்ற யுவராஜ் சிங் தேர்வானார்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment