வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா நேற்று வெள்ளிக்கிழமை சிறப்புற நடைபெற்றது.
இதன் போது அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டு ஆலயப்பூஜைகளில் கலந்து கொண்டனர்.
இவ் ஆலயம் 12 வருடங்களிற்கு முன் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு ஆலயம் புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்டது.
அத்துடன் மருதடி பிள்ளையார் ஆலயம் முற்றாக இடிக்கப்பட்டு கருங்கல்லினால் நிர்மணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாலயத்துக்கான சிற்ப வேலைப் பாடுகளை இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட ஸ்தபதிகள் மற்றும் சிற்ப கலைஞர்களால் மேற்கொள்ளப்பட்டன.







0 comments:
Post a Comment