மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரரும் IPL போட்டிகளில் விராட் கோஹ்லி தலைமையிலான ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் IPL போட்டிகளில் விளையாடி வருபவருமான கெயில் இன்று உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இருபதுக்கு இருப்பது போட்டிகள் வரலாற்றில் முதல் வீரராக பத்தாயிரம் ஓட்டங்கள் எனும் அரிய சாதனையை படைத்துள்ளார்.
இன்று(18) இடம்பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியிலேயே இந்த சாதனையை கெயில் படைத்தார். 18 சதம், 60 அரைசதம் அடங்கலாக 290 போட்டிகளில் பங்கெடுத்து 285இன்னிங்ஸ்கள் விளையாடி கெயில் இந்த சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment