சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த கப்பல் பணியாளர்கள் நேற்று (12) மாலை நாட்டை வந்தடைந்தனர்.
ஏரிஸ் – 13 என்ற எரிபொருள் கப்பலுடன், அதிலிருந்த பணியாளர்கள் மார்ச் 14 ஆம் திகதி சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருந்தனர்.
இரண்டு நாட்களின் பின்னர் கப்பல் பணியாளர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டதுடன், அவர்களின் கப்பலும் மீட்கப்பட்டு, பொசாசோ துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், புத்தாண்டு மலர்வதற்கு முன்னதாக தமது குடும்பத்தாரை சந்திக்கவும் அவர்களுடன் சேர்ந்து புத்தாண்டைக் கொண்டாடுவதற்கும் ஏரிஸ் 13 கப்பலின் பணியாளர்களுக்கு அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது.

0 comments:
Post a Comment