வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் முச்சக்கரவண்டியொன்றுடன் கனரக வாகனமொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
வட்டவளை குயில்வத்தை பகுதியிலேயே மேற்படி முச்சக்கரவண்டி இன்றையதினம் (திங்கட்கிழமை) மதியம் 1.30 மணியளவில் 60 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது.
முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த முச்சக்கரவண்டி வட்டவளை பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, அதன் பின்னால் சென்ற கனரக வாகனம் ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதுண்டதால் முச்சக்கரவண்டி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.



0 comments:
Post a Comment