10 ஆண்டுகள் காத்திருந்து இந்தியாவை பழிதீர்த்து மகிழ்ந்தது பாகிஸ்தான்!


25 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தானியர் கைகளில் ICC கிண்ணம்.

இந்தியாவை சுருட்டி மடக்கி முதற் தடவையாக சாம்பியன்ஸ் கிண்ணத்தை கைப்பற்றி வரலாறு படைத்தது பாகிஸ்தான்

சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் இன்று, இந்திய அணியை எதிர்த்து  பாகிஸ்தான் அணி மோதியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற  இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவு செய்தது. அதன் படி முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பாகிஸ்தான் அணி ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை  வெளிப்படுத்தியது.

முதலாவது இலக்கில் 128 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் 59 ஓட்டங்களைப் பெற்ற அசார் அலி ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடியைத் தொடர்ந்த பஹர் ஸமான் சதம் கடந்து 114 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சொஹைப் மலிக் 12 ஓட்டங்களுடனும் நட்சத்திர வீரர் பாபர் ஆஷம் 46 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தார்கள். பின்னர் இணைந்த மொகமட் ஹபீஸ் மற்றும் இமாட் வஷீம் இணை பிளந்து காட்டினார்கள்.

இறுதியில் பாகிஸ்தான் அணி 50 பந்துப்பரிமாற்றங்கள் முடிவில் நான்கு இலக்கு நஷ்டத்திற்கு 338 ஓட்டங்களைப்குவித்தது.


இறுதிவரை இமாட் வசீம் 25 ஓட்டங்களுடனும் மொகமட் ஹபீஸ் 57 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

339 ஓட்டங்களை விரட்ட ஆரம்பித்த இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. ஓட்டமெதனையும் பெறாத நிலையில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். 5 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் விராட் கோலியின் இலகுவான பிடியெடுப்பை அஷார் அலி தவறவிட்டார்.


எனினும் அடுத்த பந்திலே விராட் கோலியும் 5 ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார். அடுத்து ஷிகர் தவானும் 21 ஓட்டங்களுடன் நடைக்கட்டினார். அடுத்து யுவராஜ்ஜும் 21 ஓட்டங்களைடன் பவிலியன் திரும்பினார். வெறும் நான்கு ஓட்டத்துடன் பினிசரையும் முடித்தது பாகிஸ்தான். அடுத்து கேதர் யாதவ்வும் ஒன்பது ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பினார்.

தொடர்ந்து வானவேடிக்கை காட்டிய பாண்டியா 76 ஓட்டங்களுடன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஜடேஜா 15 ஓட்டங்களுடனும் அஸ்வின் மற்றும் பூம்ரா ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தார்கள். இறுதியில் இந்திய அணி 158 ஓட்டங்களுக்குள் சுருண்டு மடங்கியது.

பந்து வீச்சில் ஆமீர் மற்றும் ஹசன் அலி தலா மூன்று இலக்குக்களையும் சொஹாப் கான் இரண்டு இலக்குக்களையும் கைப்பற்றி உள்ளனர்.

இறுதியில் பாகிஸ்தான் அணி 180 ஓட்டங்களால் பெருவெற்றி பெற்று முதலாவது தடவையாக சம்பியன்ஸ் கிண்ணத்தை கைப்பற்றி வரலாறு படைத்தது.





Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment