கிளிநொச்சியில் 11 வயது சிறுவனின் மரணத்திற்கு காரணமான சாரதி கைது!

\
கிளிநொச்சியில் கடந்த 17ம் திகதி விபத்துக்குள்ளான சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தான்.

இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய நபருடையது என சந்தேகிக்கப்படும் மோட்டார் வாகனம் முழங்காவில் பொலிஸாரால் கைபற்றப்பட்டுள்ளது.

அத்துடன் வாகனத்தின் சாரதியையும்கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முழங்காவில் நாகபடுவான் பகுதியை சேர்ந்த அ.அபினேஸ் என்ற11 வயது சிறுவன் முழங்காவில் தேவாலய திருவிழாவை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் வழியில் இந்த விபத்து இடம்பெறறது.

குறித்த விபத்தில் உயிரிழந்த மாணவனுக்கு நீதி கோரி நேற்று பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விபத்து இடம்பெற்ற இடத்தில் கிடந்த வாகனத்தின் இலக்கம் தகடை பொலிஸாரிடம் கையளித்தும் விசாரணைகள் இடம்பெறவில்லை என மக்கள் தெரிவித்தனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பூநகரி பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர் விபத்துக்கு காரணமான சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.





Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment