லண்டன் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ: 200 தீயணைப்பு வீரர்கள் போராட்டம்!(Video )


இங்கிலாந்து தலைநகர் லண்டனின் மேற்குப் பகுதியில் உள்ள 27 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் இன்று (புதன்கிழமை) அதிகாலை திடீரென தீ பிடித்தது. கட்டிடத்தின் மேற்குப் பகுதியில் பிடித்த தீ கட்டிடம் முழுவதும் பரவி கொளுந்துவிட்டு எரியும் நிலையில் தீயை அணைக்கும் பணியில் 40-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 200 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்டிடத்தின் ஒரு பகுதி முற்றிலுமாக இடிந்துவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறை அதன் ட்விட்டர் பக்கத்தில், "மேற்கு லண்டனில் உள்ள கிரென்ஃபெல் டவரில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேல் தளத்திலிருந்து 2-வது தளத்தில் தீ பற்றியிருக்கிறது. அது மற்ற பகுதிகளுக்கும் பரவியது. அந்தக் கட்டிடத்தில் 120 பிளாட்டுகள் உள்ளன. விபத்துப் பகுதியிலிருந்து இதுவரை இருவர் மீட்கப்பட்டுள்ளனர். மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது" எனத் தெரிவித்துள்ளது.

கிரென்ஃபெல் டவர் கடந்த 1974-ம் ஆண்டு கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தீ விபத்து குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற அமேசிங் ஸ்பேசஸ் நிருபர் ஜார்ஜ் கிளார்க் ரேடியோ 5 - விடம் கூறும்போது, "நான் சம்பவ இடத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் இருக்கிறேன். என் மேனி முழுவதும் சாம்பலாக உள்ளது. அப்படியென்றால் தீ விபத்தின் வீரியத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்" என்றார்.

புகை மண்டலமான பகுதி:

அடுக்குமாடி கட்டிடத்தில் தீ பிடித்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் மக்கள் தங்கள் வீடுகளின் கதவு, ஜன்னல்களை பூட்டிவைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment