கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் ஏழு இலட்சத்து 26 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
நீதி அமைச்சின் வருடாந்த செயற்பாட்டு அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் மூவாயிரத்து 556 வழக்குகள் உச்ச நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாகவும், நான்காயிரத்து 837 வழக்குகள் மேன்முறையீட்டு நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வழக்குகளில் ஆறு இலட்சத்து 99 ஆயிரத்து 784 வழக்குகள் கடந்த ஆண்டுகளின் வழக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment