யாழ்ப்பாணம் தொண்டைமனாறு பகுதியில் 56 கிலோ கஞ்சாவுடன் கடற்படையினர் இருவரை கைது செய்துள்ளனர்.
இன்றைய தினம்(10) காலை கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய தொண்டமானாறு கடற்பரப்பில் ரோந்து சேவையில் ஈடுபட்ட வேளை 56 கிலோ கஞ்சாவுடன் படகு ஒன்றில் வந்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் தற்போது காங்கேசன்துறை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவிடம் இரு சந்தேக நபர்கள் மற்றும் கஞ்சா பொதிகள் கடற்படையினரால் பாரப்படுத்தப்பட்டுள்ளது.


0 comments:
Post a Comment