சி.வி.கேயின் சிம்மாசனம் 90 ஆயிரம் ரூபாவாம் !! – மூன்று வருடத்தில் மூன்றாவது ஆசனம்!


வடமாகாண அவைத்தலைவரின் புதிய ஆசனத்தின் பெறுமதி 90 ஆயிரம் ரூபாய் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடமாகாண அவைத்தலைவர் சி.வீ.கே. சிவஞானம் அவைத்தலைவராக அவையில் கடந்த 14ஆம் திகதி அமர்வில் பண்டைய கால அரசர்களின் சிம்மாசனத்தை ஒத்த வடிவமைப்பை கொண்ட பிரத்தியோக ஆசனத்தில் அமர்ந்திருந்தார். குறித்த ஆசனத்தின் பெறுமதி 90 ஆயிரம் ரூபாய் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. .

வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு கடந்த மூன்று வருட காலத்தினுள் அவைத்தலைவர் தனது ஆசனத்தை மூன்றாவது தடவையாக மாற்றியுள்ளார். அதேவேளை மாகாகண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு சபை ஆரம்பிக்க்கப்பட்ட போது வழங்கப்பட்ட ஆசனங்களே தற்போதும் காணப்படுகின்றது. மாகாண சபை நிதி வீண்விரயம் ஆக்கப்படுவதாக பல தடவைகள் அவைத்தலைவர் சபை அமர்வுகளில் சுட்டிக்காட்டி பேசி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இதேவேளை 90 ஆயிரம் ரூபாய் பெறுமதியான குறித்த ஆசனத்தில் அவைத்தலைவர் கடந்த 14ஆம் திகதி அமர்வில் மாத்திரமே அமர்ந்திருந்தார். அதன் பின்னர் முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை அவைத்தலைவர் ஆளுனரிடம் கையளித்தமையால் அவைத்தலைவர் பக்கம் சார்ந்து செயற்பட்டு உள்ளதாகவும், அதனால் இனிவரும் காலங்களில் அவர் அவைத்தலைவராக தொடர்ந்து இருப்பது அறமில்லை எனவும் ஆகையால் அவர் பதவி விலக வேண்டும் என்றும் பரவலாக கருத்துக்கள் முன்வைக்கபப்ட்டு வருகின்றது.

அத்தகைய கருத்துக்களுக்கு செவிசாய்த்து அவைத்தலைவர் தனது பதவியை இராஜினமா செய்வார் எனில் தனக்கு என பிரத்தியோகமாக 90 ஆயிரம் ரூபாய் பெறுமதியில் சிம்மாசனம் போன்ற தோற்றப்பாட்டில் அமைக்கப்பட்ட பிரத்தியோக ஆசனத்தில் ஒரு நாள் மாத்திரமே அமர முடிந்ததாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment