யாழ்ப்பாணம் தனங்கிளப்பு பகுதியில் உள்ள சங்குப்பிட்டிப் பாலத்தின் அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று (13) மதியம் 2 மணியளவில் இரு மோட்டார் சைக்கிள்கள்
நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது படுகாயமடைந்த நால்வரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்தில் வட்டுக்கோட்டையை சேர்ந்த இருவர் காயமடைந்தவர்களில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 comments:
Post a Comment