காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்!


கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்னாலுள்ள கடலில் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி இன்று (15) தங்களுக்கு நியாயமான தீர்வொன்றினை பெற்றுத்தருமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்னால் தங்களுடைய காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் விடயத்தில் கவனம் செலுத்துமாறும் நியாயமான தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி 100வது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டும் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லையெனவும் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருகோணமலை வவுனியா மாவட்டங்களைச்சேர்ந்த 150ற்கும் மேற்பட்டவர்கள் இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.




Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment