சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியின் இன்றைய போட்டியில், இந்திய அணியை எதிர்த்து இலங்கை அணி பலப்பரீட்சை நடத்துகின்றது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் களத்தடுப்பை தெரிவு செய்தார்.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 பந்துப்பரிமாற்றங்கள் முடிவில் இந்திய அணி 6 இலக்குக்கள் நஷ்டத்திற்கு 321 ஓட்டங்களைக் குவித்தது.
இந்திய அணி சார்பாக ஷிகர் தவான் 125 ஓட்டங்களையும், ரோகித் ஷர்மா 78 ஓட்டங்களையும் டோனி 63 ஓட்டங்களையும் குவித்தனர். இலங்கை சார்பில் பந்துவீச்சில் மலிங்க இரண்டு இலக்குக்களை கைப்பற்றினார்.
இலங்கை அணி 322 என்ற சாதனை இலக்கை நோக்கி துடுப்பாட்டத்தை நிகழ்த்தும் இலங்கை அணி தற்போது 25 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 1 இலக்கு நஷ்டத்திற்கு 143 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. நிரோஷன் டிக்வெல்ல 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். களத்தில் குணதிலக்க 54 ஓட்டங்களுடனும் , மென்டிஸ் 39
ஓட்டங்களுடனும் ஆடிக்கொண்டிருக்கின்றார்கள். பந்து வீச்சில் புவனேஸ்வரகுமார் ஒரு இலக்கை கைப்பற்றினார்.
வெற்றி பெறுவதற்கு 25 பந்துப்பரிமாற்றங்களில் மேலதிகமாக 214 ஓட்டங்களைப் பெற வேண்டும்.

0 comments:
Post a Comment