உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வவுனியா பன்றிக்கெய்தகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இன்று சுற்றுச்சூழல் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
குறித்த நிகழ்வு வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் பணிப்பாளர் வி.சிறிஸ்கந்தராஜா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் சுற்றுச்சூழல் தொடர்பான கண்காட்சி நிகழ்வு ஒன்றும் இடம்பெற்றிருந்தது.
மேலும் குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் கே.பரந்தாமன் கலந்துகொண்டு தேசியக்கொடியை ஏற்றிவைத்து சுற்றுச் சூழல் தொடர்பான கண்காட்சி நிகழ்வையும் நாடா வெட்டி ஆரம்பித்து வைத்தார்.
இதன்போது வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் மாணவர்களால் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் கழிவுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததுடன் அதில் சிறப்பான தயாரிப்புக்களை செய்த மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.
0 comments:
Post a Comment